Uncategorized
இரத்தினக்கல் அகழ்வில் இளைஞர் மண்மேடு சரிந்து வீழ்ந்து மரணம்

கெசல்கமஓயா காப்புக்காட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் தோண்டிய இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர், காசல்ரி நீர்த்தேக்கத்துக்கு பிரதானமாக தண்ணீர் செல்லும் கெசல்கம ஓயா காப்புக்காட்டில் நேற்று(12) பிற்பகல் மண் மேட்டின் கீழ் விழுந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.பொகவந்தலாவ டின்சின் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் குகேந்திரன் (வயது 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது வசிப்பிடத்தை ஒட்டியுள்ள கெசல்கமுஓயா காப்புக்காட்டில் மற்றுமொரு குழுவினருடன் இணைந்து பெரிய பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.உடன் இருந்தவர்களும், சுற்றுவட்டார மக்களும் இணைந்து குழிக்குள் மண் மேட்டின் கீழ் புதையுண்ட இளைஞனை, சுமார் 2 மணித்தியாலங்களின் பின் சுமார் 20 அடி ஆழமுள்ள குழியில் இருந்த மண்ணை அகற்றிக் கொண்டு சென்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞனின் சடலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.கெசல்கமுஓயாவை அண்மித்த காப்புக்காட்டில் அனுமதியின்றி இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் சடலத்தை ஹட்டன் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.