உலகம்
மீண்டும் சீன இந்திய மோதல்

இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரு நாட்டு எல்லையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சீன ராணுவத்தின் முயற்சிக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில், எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கோட்டையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையில் நேருக்கு நேர் மோதல்கள் இடம்பெற்றதாகவும், மோதல் காரணமாக இரு தரப்பு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சீன ராணுவம் காயமடைந்த வீரர்களை எல்லையில் இருந்து அழைத்துச் சென்றது. அண்மையில் கிழக்கு லடாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.