Sports
இலங்கையின் மாபெரும் கிரிக்கட் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் இன்று தொடங்குகிறது. இந்த போட்டித் தொடர் 3வது முறையாக நடைபெறுகிறது. போட்டிகள் ஆரம்பமாகியவுடன் இன்று பிற்பகல் முதல் போட்டியில் யாழ் கிங்ஸ் அணியும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் விளையாடவுள்ளன.கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று இரவு நடைபெறவுள்ளது. 18 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான எல்பிஎல் போட்டியில் 24 போட்டிகள் அடங்கும்.இந்தப் போட்டிகள் கொழும்பு சூரியவெவ, பல்லேகல மைதானங்களில் நடைபெறவுள்ளன. போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.