உள்நாட்டு செய்தி
மாணவனுக்கு நடந்த கொடூரம், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு.
பேவோட்ஸ் கல்லூரியில் கற்கும் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவன் ஒருவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பி வைத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகழ்வொன்றை கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது பரீட்சை பெறுபேற்றை பாட்டியிடம் கூறிவிட்டு தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பிட்டிய பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த மாணவன் தலைக்குக் கீழால் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அம்பிட்டிய பிரதேசத்தில் சில காலமாக இயங்கி வரும் கும்பலொன்று இந்த கொடூர செயலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தி வரும் பிரதேசவாசிகள், குறித்த கும்பலுக்கு பயந்து மாணவர்களின் குடும்பத்தினர் குறித்த தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஹெரோயின், ஐஸ் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு எவ்வளவோ தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். தகவல் கொடுப்பவர்களின் தகவல்களை குற்றவாளிகளுக்கு அளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.