உள்நாட்டு செய்தி
மின்கட்டணம் ஐந்து இலட்சத்தை தாண்டியது. திம்புலாகல ஆரண்ய பூமியில் மின்சாரம் துண்டிப்பு.
திம்புலாகல ஆரண்ய பூமியில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தாமை காரணமாக மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதனால் அங்கு வாழும் சுமார் 200 பிக்குகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சேனாசனாதிபதி மில்லனே சிறியலங்கார தெரிவித்துள்ளார்.
ஆரண்ய சேனாசனத்தில் மின்வெட்டு ஏற்படுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை எனவும், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இந்த சேனாசனத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் ஒவ்வொரு அரசாங்கமும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.