உள்நாட்டு செய்தி
ருஹுனு தேசிய ஆசிரியர் கல்வி பீட மாணவர்களிடையே மோதல் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ருஹுனு தேசிய ஆசிரியர் கல்வி பீட மாணவர்களிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வருடங்களாக கல்வி கற்கும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு மாணவர்களாவார்கள்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.