உள்நாட்டு செய்தி
மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது.
வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் யோசனையை இலங்கை மின்சார சபை நிராகரித்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு மத ஸ்தலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள 180 மின் அலகுகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பொதுப் பயன்பாட்டு ஆணையம் பரிந்துரைத்தது.
ஆனால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நிராகரித்த மின்சார சபை, பிரேரணையை நடைமுறைப்படுத்தினால், சபைக்கு ஏற்படும் நட்டத்தை எவ்வாறு ஈடுசெய்வது என்பதை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் 2 பில்லியன் ரூபா வருடாந்த வருமானத்தை இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கின்றது.