உள்நாட்டு செய்தி
சிறுநீரகங்களை விற்று வாழ்க்கை நடத்தும் இலங்கையர்கள்
இராஜகிரியவில் பெரும் சிறுநீரக மாபியா, ஏழைகளிடம் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொண்டு பணமும் கொடுக்காது அலைக்கழிக்கும் கேவலமானவர்கள்.
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இந்நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து சிறுநீரகம் பெற்ற சிலருக்கு பணம் கூட வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூரண தகவல்கள் அன்மையில் வெளிவரும் என்பதோடு இந்த வலையமைப்பும் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.