உள்நாட்டு செய்தி
மாபெரும் ஓவியப் போட்டி
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் திறமையான கலைஞர்கள் அனைவரையும் இதில் இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், புதிய கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற சித்திரக் கலைஞர் எச். எஸ் சரத்தின் 50 ஆவது தனிப்பட்ட ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.