Connect with us

Sports

டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை

Published

on

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இலங்கை அணி முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தனது இரண்டாவது இனிங்சில் 67 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்த தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் டீன் எல்கர் தெரிவானார்.