உள்நாட்டு செய்தி
தப்பிச்சென்ற 217 கைதிகளும் தடுப்புக்காவலில்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 217 கைதிகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.