உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார்.
இந்த 04 அமைச்சுகளுக்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.