உள்நாட்டு செய்தி
“சமூக சமையலறை” 400 பேருக்கு மதிய உணவு…
உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது.
ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியது.
சமூக சமையலறைக் கருத்தை அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் பரப்புவதே இதன் நோக்கமாகும்.