உள்நாட்டு செய்தி
சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்ட மற்றுமொரு செயற்றிட்டம்
ஆரோக்கியமான கிராமம்’ திட்டத்தின் (Wellness Village) கீழ் பியகம வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டம் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவிற்கு அமைய சுற்றுலாத்துறையில் “மெடிகல் டுவரிசம்” பிரிவை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு, ‘வெல்னஸ் விலேஜ்’ திட்டம் இலங்கையில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்டு சர்வதேச தரத்திலான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.