Connect with us

உள்நாட்டு செய்தி

“பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்”

Published

on

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்.  இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள்.

ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐநா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் என கொழும்பு ஐநா அலுவலக வளாகத்தில் இருந்து செயற்படும், ஐநா மனித உரிமையாளரின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டசுக்கு  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் கோரியுள்ளார்.