உள்நாட்டு செய்தி
“தேசிய சபை”க்கான பெயர் பட்டியல்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ´தேசிய சபை´க்காக தற்போது பெயர்கள் வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றில் சமர்பித்தார்.
அதேபோல், திருத்தம் ஒன்றை முன்வைத்த ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தெரிவிக்கையில், சபாநாயகர் தலைவராக இருந்த போதிலும், பிரதமர், பாராளுமன்றின் சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் தீர்மானிக்கப்படும் வகையில் நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒன்பதாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகாமல் ´தேசிய சபை´ இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய சபையில் உள்வாங்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு.
டக்ளஸ் தேவானந்தா
நசீர் அஹமட்
டிரான் அலஸ்
சிசிர ஜெயக்கொடி
சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ரவூப் ஹக்கீம்
பவித்ராதேவி வன்னியாராச்சி
வஜிர அபேவர்தன
ஏ.எல்.எம். அதாவுல்லா
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ரிஷாத் பதியுதீன்
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
பழனி திகாம்பரம்
மனோ கணேஷ்
உதய கம்மன்பில
ரோஹித அபேகுணவர்தன
நாமல் ராஜபக்ஷ
ஜீவன் தொண்டமான்
ஜி.ஜி பொன்னம்பலம்
வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர்
அசங்க நவரத்ன
அலி சப்ரி
சீ.வீ விக்னேஸ்வரன்
வீரசுமண வீரசிங்க
சாகர காரியவசம்