உலகம்
ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு மௌன அஞ்சலி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்கு முடிந்ததும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
ராணியின் இறுதிச்சடங்கி ல் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இறுதிச்சடங்கையொட்டி முக்கிய இடங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.