Uncategorized
இலங்கையின் கொவிட் அப்டேட்
நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
6 ஆண்களும் 3 பெண்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 667,735 ஆக அதிகரித்துள்ளது.