Sports
போராடி தோற்றது அயர்லாந்து
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்றது.
முதல் T20 யில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது T20 டப்ளினில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.
சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து.
இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 226 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது.
வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது.
இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் 20தொடரை கைப்பற்றியது.