Connect with us

உலகம்

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 54 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 393 ஆக இருந்தது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 56 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 716 பேர் குணமடைந்துள்ளனர்.

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 51 ஆயிரத்து 781 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 8.88 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தியா (4.34 கோடி) மற்றும் பிரேசில் (3.21 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.