உள்நாட்டு செய்தி
IMF அதிகாரிகள் இன்று வருகை

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் (IMF) குழு இன்று (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச்செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழு, ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழு ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.