உள்நாட்டு செய்தி
IMF குழு எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு…

இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
இலங்கை மிகவும் மோசமான பொருளாதார மற்றும் கையிருப்பின்மையை எதிர்நோக்கியுள்ளமை தெட்டத்தௌிவாக புலப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் (Gerry Rice) தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் சர்வதேச நாணய நிதியத்தினூடாக நடத்தப்பட்ட தொழில்நுட்ப கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு, ஒத்துழைப்புகளை வழங்கும் செயற்றிட்டம் குறித்து கொள்கை ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட தமது பிரதிநிதிகள் குழு எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் (Gerry Rice) தெரிவித்துள்ளார்.