Connect with us

Uncategorized

உலக அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 44 இலட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 619 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 708 பேருக்கும், பிரேசிலில் 68 ஆயிரத்து 437 பேருக்கும், துருக்கியில் 29 ஆயிரத்து 718 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 382 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 கோடியே 44 இலட்சத்து 84 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 5 இலட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 236 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து 5 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது .

ஆனாலும், கொரோனாவால் இதுவரை 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – 1,73,62,167

இந்தியா – 99,32,548

பிரேசில் – 70,42,695

ரஷியா – 27,34,454

பிரான்ஸ் – 24,09,062