உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கிடையில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
=-?>?”.,mகடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று சந்தித்தருந்தனர்
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களக்கு கருத்துரைக்கையில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்