Connect with us

உள்நாட்டு செய்தி

கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய விசேட குழு

Published

on

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்கள் ஆகும்.