உலகம்
உக்ரைனில் இருந்து பத்து லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: UN

ஒரு மில்லியன் உக்ரைனியர்கள் நாட்டை விட்டு வௌியேறி அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது.
கடந்த ஏழு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உக்ரைனை விட்டு வௌியேறியதை கண்ணுற்றதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக சுமார் 4.54 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹங்கேரியில் 1.16 லட்சத்தினரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாகியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக அகதிகளுக்கான முகவர் அமைப்பின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.