உள்நாட்டு செய்தி
பூஜித் ஜயசுந்தர விடுதலை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நாமல் பலாலே, ஆதீத்ய பட்ட நெத்தி மற்றம் மொஹமட் இஷார்தீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையிலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து குறித்த இருவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரித்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவடைந்தன.