உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி, கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகளின் போது, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுவுக்கோ, விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு உள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.