உள்நாட்டு செய்தி
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையான தீர்வாக ஏற்கவில்லை:மனோ

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி கெட்டபுலா உச்சிமலை கீழ்பிரிவு தோட்டத்தில் 05.02.2022 அன்று இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.