உள்நாட்டு செய்தி
யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம்

மீனவர்களின் போராட்டம் காரணமாக யாழ். மாவட்ட செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியையும் மறித்தும் போராட்த்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.