Sports
அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை அணியில் இருவருக்கு கொவிட்
அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் இலங்கையணியின் உதவியாளர் டில்ஹான் பொன்சேக்காவுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது உயிர் பாதுகாப்பு குமிழியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும் அவர்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி அணியுடன் இணைவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கையணி எதிர்வரும் 3 ஆம் திகதி நாட்டடிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.