உள்நாட்டு செய்தி
மேலும் சில பகுதிகள் மூடல்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (07) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட புளுமெண்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லிம்பிட்டிய விஜயபுர கிராம சேவகர் பிரிவுகள் என்பன இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ கொம்பனி தெரு, ஹுனுப்பிட்டிய கிராமசேவகர் பிரிவு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60 ஆவது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி என்பன இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கொழும்பு மாவட்டத்தில் முகத்துவாரம் கொட்டாஞ்சேனை கிரோண்ட்பாஸ் ஆட்டுப்பட்டித்தெரு டேம் வீதி வாழைத்தோட்டம் மாளிகாவத்தை தெமட்டகொட மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
மேலும் கொம்பெனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த கிராமசேவையாளர் பிரிவு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன குடியிருப்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரன்திய உயன குடியிருப்பு பேர்குசன் வீதி தெற்கு பிரிவு ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெல்லேகொட வடக்கு கிராமசேவகர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டி, ஹேகித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவுகள் என்பனவும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும்,வத்தளைப் பொலிஸ் பிரிவில்இ குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஇ கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடவத்தஇ பேலியகொட கங்ஹபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும்இ பேலியகொடை பொலிஸ் பிரிவில்இ குறித்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள்இ தனிமைப்படுத்தலில் இருந்துஇ இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களனி பொலிஸ் பிரிவு இன்று (07) காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தட்டிருக்கும் என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.