உள்நாட்டு செய்தி
ரயில் சேவைகள் வழமைப்போன்று?

இன்று (15) முதல் ரயில் சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (14) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகல் வேளையிலேயே இடைநிறுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும் புகையிரத சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.