கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தான் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்து கலந்துரையாடல் இன்று (09) மாலை 4 மணிக்கு இடம்பெறும் என...
போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் இருவர் பொலிஸார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஆர்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தால் கொழும்பில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கலைத்து வருகின்றனர்.
அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் யாவும் ஜூலை 11 முதல் ஜூலை 15 வரையிலும் மூடப்பட்டிருக்கும். புதிய தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 18 ஆம் திகதியன்று ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாளைய தினம் கொழும்பில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு 9 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றிரவு...
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்னவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்கு காலப்பகுதியில்...
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில்...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் மே.தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 78 ஆயிரத்து 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....