பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின்...
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புகள் அமைப்பின் மீதான தடை, தொடர்ச்சியாக நீடிக்கும் என பிரித்தானிய உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. “2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்படுவதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப் பிராந்தியம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஏனைய 30க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக விளங்குகின்றது. பொதுமக்கள் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இலக்கு வைத்த கொடூரங்கள் மற்றும் அட்டூழியங்கள், உலகளாவிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை பாதிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டது. உலகளாவிய ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதானது, சர்வதேச வலையமைப்பின் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல், வன்முறைத் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தீவிரப்படுத்துதல், இன ஒற்றுமையை சீர்குலைத்தல் மற்றும் அவர்கள் செயற்படும் ஒவ்வொரு நாட்டிலும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை சீர்குலைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குறித்த அமைப்பின் எஞ்சிய நபர்களால் தொடர்ந்தும் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்பதனை அங்கீகரிப்பதாகும்....
பிரிட்டனில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டப் பிறகு, பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக இருக்காது என்று அந்த நாட்டு வீட்டு வசதித் துறை அமைச்சா் ராபா்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்...
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால்,...
இன்று நள்ளிரவு முதல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களுக்குள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்றின் புதிய அலை வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பு காரணமாக தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போரிஸ் ஜோன்சன் இந்த ஆண்டில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள...