இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்...
மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அரச பாடசாலைகளில் 11 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்தின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தோர் விபரம்வெலிப்பனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்கொழும்பு 15 இல் வசித்த 76 வயதான பெண். -அரசாங்க தகவல் திணைக்களம்-
தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்...
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். ‘கோவிஷஸ்ல்ட், கோவாக்சின்...
மேலும் 215 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,586 ஆக உயர்வடைந்துள்ளது.