ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது . கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07)...
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் நாளை (06) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேனநிமல் சிறிபால டி சில்வாமஹிந்த அமரவீரதயாசிறி ஜயசேகரதுமிந்த திசாநாயக்கலசந்த அழகியவன்னரஞ்சித் சியம்பலாபிட்டியஜகத் புஷ்பகுமாரஷான்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC)...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த...
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேவலமான ஆட்சியை அகற்றி,...