அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தி அமைதியாக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ஆணைக்குள் ஒருமித்த கருத்து மூலம்...
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதற்கு மதிப்பளித்து, அமைதியான முறையில் செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு முப்படையினருக்குக் காணப்படுகிறது....
கொழும்பு-02 பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக, வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப்...
இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஊரடங்குச்சட்டத்தை மீறுவது பொது அமைதியைப் பேணுவதற்கு தடங்கலாக கருதப்படும். இதனடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள...
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளனர். வன்முறையை ஆதரித்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினைத் தொடர்ந்து அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.