குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று...
இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும் என் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில்,...
அண்டை நாட்டில் நடக்கும் விடயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதனை கூறியுள்ளார். Yuan Wang 5...
இலங்கை மத்திய வங்கியின் சபை கடந்த காலங்களில் எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய...
முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில்...
21 மடிக்கணனிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 26 மற்றும் 32 வயதுகளை உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் ராகமை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்...
இரத்தமலான பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமது நாட்டு Yuan Wang 5 கப்பலால் மூன்றாம் தரப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் செய்திப் பிரிவு பிரதி பணிப்பாளர் wang wenbin இதனை கூறினார்.
2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.