உலகம்
நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு மலர்ந்தது

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது.
உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும்.
அந்த வகையில் நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது.
நியூசிலாந்தின் ஒக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது.