உலகம்
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகத்தின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் இறுதியஞ்சலி
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்றிரவு உயிரிழந்தக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அவரின் சடலம் தொடர்பான இறுதி இறுதி சடங்கு இன்று மாலை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம். நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 73 வயது.
அவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளமை குறிப்பிடதக்கது.
ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் நாடுப்புற பாடல்களையும் பாடி உள்ளார்.
மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 7.30 க்கு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அவர்களுடன் அமைச்சர் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.