உலகம்
நீலகிரி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்யதாக தகவல் கிடைத்துள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
மேகமூட்டம் காரணமாக வழிதவறி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
………………………….இரண்டாம் இணைப்பு…………………………………..
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புபடையினருடன் விரைந்த குன்னூர் ராணுவ முகாம் அதிகாரிகள் எரிந்த நிலையில் இரண்டு உடல்களை மீட்டனர்.
இதுவரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மலை அடிவாரத்தில் கிடக்கும் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.