உலகம்
வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு
வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.
அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது.அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு பேரவை கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதற்கு மத்தியில் அங்கு கொரோனா பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறான காரணங்களால் அங்கு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.