Sports
இலங்கை,தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர் சமநிலையில்
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை டக்வர்த் லுயிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, மழை குறுக்கீடு செய்த இந்தப் போட்டி 47 ஓவர்களுக்கு வரையறுக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஜானிமென் மலான் 121 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ட்ரிக் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு மழை காரணமாக 41 ஓவர்களில் 265 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் இலங்கை அணி 36.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில் சரித் அசலங்க 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் தாம்ரீஸ் சாம்சீ ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளன.