உலகம்
இஸ்ரேலுடன் – ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேலுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்று (21) அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், போர் நிறுத்தம் பற்றிய உறுதியான நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி கடந்த 11 நாட்களாக நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி முதல் இடம்பெற்ற மோதலில் இதுவரை 230 பாலஸ்தீனியர்களும், 12 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதுடன், இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.