உலகம்
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காசாவின் உட்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன.
நேற்று (17) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கிலோமீட்டர் தூரமுள்ள சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 9 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முந்தைய நாள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலை விட இது கடுமையானது என காசாவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினா் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், காசா நகரம் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது.
சமீப நாட்களாக இஸ்ரேல் காசா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களைக் குறிவைத்து தாக்கி வருகிறது.