Sports
இலங்கையணி கிரிக்கெட் அணி பங்களாதேஸ் நோக்கி பயணம்

இலங்கையணி கிரிக்கெட் அணி வீரர்கள் பங்களாதேஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
இலங்கை அணி இன்று (16) அதிகாலை 4.15 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பங்களாதேஸ் நோக்கி சென்றுள்ளது.
இலங்கையணிக்கு குசல் ஜனித் பெரேரா தலைவராக செயற்படவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையில. 3 ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அதன்படி முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளது.
Continue Reading