உலகம்
இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் மோதல்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள சேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது இந்த மசூதியின் முற்றத்தில் இஸ்ரேலிய பொலிஸார் நுழைந்து, தொழுகையில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது ரப்பர் குண்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இஸ்ரேல் பொலிஸ் படைகளுக்கும், தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்ததுடன் 6 இஸ்ரேல் பொலிஸாரும் படுகாயம் அடைந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.