Connect with us

உலகம்

நடிகர் விவேக் காலமானார்

Published

on

சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர் தனது 59 ஆவது வயதில் காலமானார்.

நடிகர் விவேக், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் அவர் வல்லவர்,
அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து வெளிச்சம் போட்டு காட்டியவர் நடிகர் விவேக்.

திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.

‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார்.

இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும்.

நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைப்பிடித்து, அதனை செயல்படுத்தியும் வந்தவர்.

நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவராவார்.

அதன்படி கலாமிம் கொள்ளையாக இருந்த மரநடுகையை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டவர்.

இதேவேளை இன்று மாலை 5 மணிக்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என விவேக்கின் உறவினர்களை மேற்கோள்காட்டி நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *