Sports
விமானப்படை வீரர் பாக்கு நீரினையை கடந்து புதிய சாதனை

இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.
அவர் நீந்திச் சென்ற மொத்த தூரம் 59.3 கிலோ மீற்றர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.
இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோஸான் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) அதிகாலை 2 மணியளவில் தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.
அவர் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் இன்று (11) அதிகாலை 3 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஆனந்த குமார் என்ற நபர் இந்த சாதனையை படைந்திருந்த நிலையில் அவருக்கு குறித்த தூரத்தை கடக்க 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.